Successful என்பது பெரிய செயல்களில் மட்டும் இல்லை.நாம் செய்கின்ற சிறு செயல்களிலும் உள்ளது என்று தன் முயற்சிகளின் மூலம் டான்ஸர் மற்றும் நடிகையாக சினிமா துறையில் வலம் வரும் srija அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.
Name | srija jagathisan |
Fathers name | jagathisan |
Mothers name | Malathi |
Dob | 15/5/1999 |
Native place | Rameshwaram |
School name | C S I Bain |
Clg name | Anna Adarsh women college |
Current place | Chennai |
Occupation | Acting |
Degree | B A Tourism travel management |
Movie names or ablum or advertisements names | Naan comali,Mr middle class, Thondil meengal,Blue star, Kalagathaivan |
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் srija?
என்னுடைய சொந்த ஊர் இராமேஸ்வரம்.தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறேன்.
School studies வந்து C S I Bain படித்தேன்.
B A Tourism travel management ,Anna Adarsha women college ல் படித்தேன்.
உங்களுக்கு எப்போது டான்ஸர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது srija..?
நான் ஒரு பேக் டான்ஸராக டெலிவிஷன் துறையில் இருக்கின்றேன். எனக்கு டான்ஸர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் நான் 3rd standard படிக்கும் போது இருந்தே இருந்தது. அது அன்றிலிருந்து இன்றுவரை வரை என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
டான்ஸராக இருந்த உங்களுக்கு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது அல்லது சிறுவயதில் இருந்தே உங்களுக்கு நடிகை ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததா…?
நடிப்பு பற்றிய எந்தவொரு கனவுகளும் எனக்கு சிறுவயதில் இருந்தே இல்லை.dance ல் மட்டுமே கவனம் செலுத்தினேன். நடிக்கும் வாய்ப்பு என்பது எனக்கு எதார்த்தமாக கிடைத்த ஒன்றே ஆகும். ஒரு முறை ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது shooting பார்க்கலாம் என்றே சென்றேன்.ஏனென்றால் நான் movies நிறைய பார்ப்பேன்,அதனால் சினிமா சூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருந்தது , அதற்காக ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சென்றேன். பிறகு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. நான் சினிமாவை நேசிக்க தொடங்கினேன். நான் ஏற்க்கும் கதாபாத்திரங்களில் என்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் நான் என்னை ஈடுபடுத்தினேன்.
உங்களின் சினிமாவிற்கான முதல் ஆடிசன் பற்றியும் அதில் உங்களின் அனுபவம் பற்றியும் கூறுங்கள் srija..?
முதல் ஆடிசன் என்றால் ரெட் ஜெயின்ட் மூவியின் கழகத் தலைவன் படத்திற்கான ஆடிசன் தான், பொதுவாக நான் வெற்றியை எதிர்நோக்கி எந்த ஒரு செயலையும் செய்வது இல்லை. என்னால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே துணையாக வைத்து செயல்படுவேன். அது ஒரு நாள் அதற்கான வெற்றியை பெற்று தரும் என்பது என்னுடைய எண்ணம்,என்னுடைய முதல் ஆடிசனும் கூட அதைப்போன்று தான்.நான் அதில் select ஆனேன். அதற்கு அடுத்து சினிமாவில் எனக்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர தொடங்கின.
சினிமாவை பற்றி உங்கள் பார்வை என்ன srija…?
இங்கே திறமையானவர்கள் மட்டும் தான் நிலைத்து இருக்க முடியும். ஆனால் அந்த திறமையானவர்களுக்கு வாய்ப்பு என்பது பெரும்பாலும் இங்கே கிடைப்பது என்பது மிகவும் குறைவு தான்.ஏனென்றால் சிலரின் செல்வாக்கு பலருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்று தருகிறது, இது எல்லா இடங்களிலும் நடப்பது இல்லை. சிலர் திறமையானவர்களுக்கும் வாய்ப்புகள் தருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை நம்மேல் நம்பிக்கை வைத்து செய்ய வேண்டும்.அது நடிப்பாக இருந்தாலும். சரி வேறு எந்த பிரிவை சார்ந்ததாக இருந்தாலும் சரி.
ஒரு நாள் உங்களின் திறமை மிகுந்த உழைப்பிற்கு கண்டிப்பாக சினிமா உலகம் உங்களை உற்று நோக்கி வெற்றியின் உயரத்திற்கு கொண்டு செல்லும்.
சினிமா துறையில் நீங்கள் கடந்து வந்த நிராகரிப்புகள் தடைகள் பற்றி சொல்லுங்கள் srija…?
நிராகரிப்புகள் என்றால் நான் ஆடிசன் போகும் சில இடங்களில் என்னிடம் நடிப்பு திறமை இருந்தும் என்னுடை நிறத்தின் காரணமாக அங்கே நிராகரிக்கப்பட்டேன், அந்த வாய்ப்புகள் அதே ஆடிசனில் கலந்து கொண்ட வேறொரு பெண்ணுக்கு நிறத்தின் காரணமாக வழங்கப்பட்டது.
ஆனால் அது ஒரு சில இடங்களில் மட்டுமே சினிமா துறையில் திறமை வாய்ந்த நல்ல மனிதர்களும் இருக்கின்றார்கள் அவர்கள் மூலம் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் தற்போது பெரும்பாலும் சினிமா துறையில் நிறம் பார்த்து வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் எந்த வித கதாபாத்திரத்தையும் எல்லோரும் ஏற்று நடிக்கலாம் என்பது சினிமா துறையில் வர வேண்டும். எல்லோருக்கும் இங்கே சமமான respect கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.
உங்களின் movies , பற்றி சொல்லுங்கள் srija…?
Movies பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் கோமாளி, மிஸ்டர் மிடில் கிளாஸ், தூண்டில் மீன்கள், புளூ ஸ்டார், கழக தலைவன். இதை தவிர short film நடித்து உள்ளேன்.
சினிமா உலகில் உங்களின் கனவுகள் பற்றி சொல்லுங்கள் srija…?
என்னுடைய வாழ்வின் பயணம் சினிமாவை நோக்கியே நகர்கின்றது என்றே சொல்வேன்.சினிமா துறையில் சிறந்த நடிகையாக வேண்டும் என்பது எனது விருப்பம் மற்றும் கனவு ஆகும்.
உங்களைப் போல் சினிமா துறையில் கனவுகளோடு சாதிக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..?
சினிமா துறையில் நீங்கள் எந்த பிரிவுகளின் கீழ் சாதிக்க விரும்பினாலும் அதனைப் பற்றிய புரிதலையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்களின் சினிமா பற்றிய சாதனை கனவுகளுக்கு துணையாக இருந்து உங்களை சினிமா துறையில் சிறந்த நபராக மாற்றும், Srija உங்களுடனான இந்த நேர்காணல் எங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தருகின்றது, சினிமா துறையில் நீங்கள் சிறந்த நடிகையா ஜொலித்திட எங்களின் வாழ்த்துக்கள்.
✍️ சுபா கிட்டு.