VJ Saranya ganesh

WhatsApp Image 2023 06 17 at 2.38.24 PM 1 1

யார்? இந்த சரண்யா கணேஷ்

நம்மால் சரண்யா கணேஷ் என்று அழைத்து அறியப்படும். இவரின் இயற்பெயர் சரண்யா. கணேஷ் என்பது இவரின் அப்பாவின் பெயராகும் கோயம்புத்தூரை தனது சொந்த ஊராக கொண்ட இவரின் பிறந்த தேதி ஜீன் 5 ஆகும்.
சினிமாவை பற்றி சிறிதும் அனுபவம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவர்.
இவ்வாறு இருந்தவர் மீடியா துறையில் எவ்வாறு அறிமுகமானர்
என்ற கேள்வி தோன்றலாம்.
எந்த ஒரு துறையிலும் சாதிப்பது என்பது எளிதில் நடந்துவிடாது
பல போராட்டங்களை கடந்தே முன்னேறி செல்ல வேண்டும்
அவ்வாறே இன்று முன்னேறி ஆங்கர்.ஷோ புரொடியூசர்.வாய்ஸ் ஓவர்.மற்றும் இணை இயக்குனர் . நடிகை என்று கலை உலகின் பல பரிமாணங்களில் முன்னேறி கொண்டு வரும் நடிகை சரண்யா கணேஷின் ஆரம்ப கால மீடியா பயணம் எவ்வாறு தொடங்கியது என்று பார்க்கலாம்.

சரண்யா கணேஷ்| பள்ளி கல்லூரி கல்வியும்| கார்ப்ரேட் கால் சென்டர் வேலையும்|

பள்ளி கல்லூரி நாட்களில் சரண்யா அவர்கள் எந்த ஒரு மேடை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது இல்லை.

காரணம் திறமை இல்லாமல் இல்லை.. பிறரின் முன்னிலையில் பேசுவதற்கு சிறிது தயக்கம்
இவ்வாறு இருக்கையில்
சரண்யா எவ்வாறு ஆங்கராக மாறியிருக்க முடியும்.என்று எண்ணலாம்.

தன் கல்லூரி கல்வி முடித்த பின்னர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கார்ப்ரேட் கால் சென்டரில்
தனது பணியை தொடங்கினார் இன்று நடிகை, ஆங்கர், ஷோ புரொடியூசர், இணை இயக்குனர் என்று அழைக்கப்படும் சரண்யா கணேஷ்.

கார்ப்ரேட் கால் சென்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முதலில் தொகுத்து வழங்க தொடங்கினார்.
இங்கிருந்தே இவரின் மீடியா துறையின் மீதான ஆர்வம் துவங்கியது.இதுவே இவர் பல டிவி சேனல்களில் பணியாற்ற அடித்தளமாகவும் விளங்கியது.

ஆங்கர் |மற்றும் ஷோ புரொடியூசராக| நடிகை சரண்யா கணேஷ்|

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் கொண்ட இவர் முதலில் ஆங்கராக அறிமுகமான நிகழ்ச்சியே live show தான்.

இதனை தொடர்ந்து u tv ல் ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் (live show special interviews)

..Raj Tv ல்
ஆங்கராக நகைச்சுவை நாயகன் நாகேஷ்.
ஸ்ரீ தேவி ஒரு சூப்பர் ஸ்டார் (sri devi oru super star)
Mega Ten movies( மெகா டென் மூவிஸ்)
பாட்டு தலைவன் TMS( patu talaivan Tms)
போன்ற நிகழ்ச்சிகளை ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார்

பொதிகை டிவியில் (DD)
Hello ungalutan (ஹலோ உங்களுடன்) மற்றும் Cine Quiz live show ளை ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார்.

புதிய தலைமுறை டிவியின் எண்டர்டெயின்மெண்ட் சேனலான புதுயுகத்தில் புரோகிராம் புரொடியூசர்( program producer) மற்றும் ஆங்கராக(Anchor) பல நேரடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ் அவைகள்

நேரம் நல்ல நேரம்(neram nalla neram)

Azhaikkalam sammaikkalam( live show)

Neram nalla neram ( live show)

Doctor on call ( live show)

Arivom arogym( அறிவோம் ஆரோக்கியம் நேரலை நிகழ்ச்சி) வாய்ஸ் ஓவர் வழங்கி வருகிறார்.

மேலும் ருசிக்கலாம் வாங்க (Rusikkalam vanga) மற்றும் Compass join cont down நிகழ்ச்சிகளில் புரொடியூசராக புதுயுகம் சேனலில் பணியாற்றி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ்.

Tune 6 music tv ல்
Best Wishes show ல் நேரலை நிகழ்ச்சியில் ஆங்கராகவும்

Open mouth நிகழ்ச்சியில் வாய்ஸ் ஓவர் (voice over) செய்தும் வருகிறார்
நடிகை சரண்யா கணேஷ்.

Mk Tv ல் forth live show
Kolly wood play list live show
Just arrived live show க்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

Raj music ல் தொடர்ந்து ஆங்கராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Super TV ல் மருத்துவ நேரம் என்ற நேரடி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார் இவர்.

வானவில் டிவியில் Cine Chips and Fine Max நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ்.

இணை இயக்குனராக பணியாற்றிய நடிகை சரண்யா கணேஷ்|

சரண்யா கணேஷ் அவர்களுக்கு இயக்குனர் துறையில் ஆர்வம் அதிகம் உண்டு.
விஸ்வல் கம்யூனிகேஷன் கல்வி பயிலாத போதிலும்.தனது கல்லூரி கல்வியில் வேறு துறையில் பட்டம் பெற்ற போதும்.
இயக்குனரின் பணிகள் அனைத்தும் தன் அனுபவத்தின் மூலமாக கற்றுக் கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் அழகர்சாமியின் தயாரிப்பில் வேந்தர் டிவியில் வெளிவந்த
ஏழாம் உயிர் என்ற டிவி
தொடரில் இணை இயக்குனராக அவரின் போஸ்ட் புரொடக்சனில் பணியாற்றினார்.
இது இவருக்கு மேலும் இயக்குனர் துறையில் சாதிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

நடிகை சரண்யா கணேஷை| ஊக்குவிக்கும் நண்பர்களும்| பெற்றோர்களும்•|

ஆரம்பத்தில் மீடியா பற்றி தனது பெற்றோரிடம் கூறிய நடிகை சரண்யாவிற்க்கு எதிர்ப்பு பெரிதும் இல்லாத ஒரு ஆதரவற்ற சூழ்நிலையே நிலவியது எனலாம்..பின்பு கார்ப்ரேட் கால் சென்டரில் தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் தனது நண்பர்கள் வட்டத்தில் பெரிதும் வரேவேற்க்கபட்டது.

பின்பு நடிகை சரண்யா கணேஷிற்க்கு பெற்றோர்களும் நண்பர்களும் மீடியாவில் தொடர்ந்து வரும் அவரின் ஆங்கரிங் நிகழ்ச்சிகளை கண்டு உற்ச்சாகமும் நம்பிக்கையும் கொடுக்க ஆரம்பித்தனர்.இது மேலும் அவருக்கு மீடியா துறையில் சாதித்திட உற்ற துணையாக இன்று வரையிலும் இருந்து வருகிறது.

சினிமாவில் நடிகை சரண்யா கணேஷின்| நடிப்பும்|லட்சிய கனவும்|

இரண்டு மூன்று திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் நடிகை சரண்யா
இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு 2. இயக்குனர் Zion Raja இயக்கத்தில் வெளிவந்த பொது நலன் கருதி. இயக்குனர் S.S சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த பக்கா மற்றும் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து ஏஜிபி (சைக்கார்ட்டிஸ் டாக்டர் கதாபாத்திரத்தில்) போன்ற படங்களில் இவர் நடித்து உள்ளார்

சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வேண்டும் என்பதே இவரின் லட்சிய கனவு ஆகும்.
இதற்க்கான முயற்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் நடிகை சரண்யா கணேஷ்
இவரின் இந்த முயற்சி
வெற்றியாக மாறி இவரை சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் புகழ் மிக்க நடிகையாக நாம் திரையில் வெகு விரைவில் காணும் காலமும் அருகில் தான் உள்ளது.என்ற எதிர்பார்ப்புக்களுடன் காத்திருப்போம்.

மீடியா துறையில் பெண்களின் வருகையும்|அதற்கு நடிகை சரண்யாவின் கருத்துக்களும்|

எல்லா துறைகளிலும் கால் பதித்து வெற்றிகள் பெறுவது கடினம் நிறைந்தது தான்.அதிலும் பெண்கள் ஒவ்வொரு துறைகளிலும் முன்னேற்றம் அடைய ஆண்களை விட அதிகமாக போராட வேண்டியுள்ளது.

அதை போன்றே மீடியா துறையில் ஆண்களின் வருகையை விட பெரும்பாலும் பெண்களின் வருகை என்பதும் விமர்சிக்கப்படுகிறது.

நம்மை சுற்றி விமர்சிப்பவர்கள் நாம் எந்த நிலையில் இருந்தாலும் விமர்சித்து
கொண்டே தான் இருப்பார்கள்.

அவற்றை தூக்கி எறிந்து விட்டு நம் மீது நம்பிக்கை வைத்து எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

மீடியா மீது ஆர்வம் கொண்ட எத்தனையோ திறமை வாய்ந்த பெண்கள் முட்டுக்கட்டையான முட்டாள்தனமான விமர்சனங்களில் முடங்கி போய் விடுகின்றார்கள்.

இந்த நிலை மாற வேண்டும்.மீடியாவில் சாதித்திட எண்ணும் பெண்களுக்கு போராட்டாங்கள் இல்லாமல் இல்லை..இது மீடியாவில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உண்டு.

நாம் நமக்கான பாதை எதுவென்று சரியாக வகுத்து கொண்டு மீடியாவில் பயணிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து வரும் எந்தவொரு போராட்டங்களிலும் இருந்து எளிதாக வெற்றி கண்டு.. சாதிக்கலாம்.

விமர்சிப்பவர்கள் என்றும் அதே நிலையில் தான் இருப்பார்கள் அவர்களை திரும்பி பார்த்து பின்னோக்கி செல்வதை விட..திரும்பி பார்க்காமல் முன்னேறி சென்று வெற்றிகள் பெற வேண்டும் பெண்கள்.

மீடியா துறையில் சாதித்திட எண்ணும் பெண்களை இந்த சமுதாயம் விமர்சிக்காமல் உற்ச்சாகம் ஊட்டி வரவேற்க்க வேண்டும்
என்பதே நடிகை சரண்யா கணேஷின் கருத்து ஆகும்.

நடிகை சரண்யா கணேஷ்| அவர்களின் லட்சிய| வெற்றி|

   சிறந்த நடிகையாகவும்.சிறந்த ஆங்கராகவும் மற்றும் மிகவும் சிறந்த இயக்குனராகும் மீடியா மற்றும் திரைபடங்களில் வெற்றி வலம் வர நடிகை சரண்யா கணேஷ் அவர்களை வாழ்த்துவோம்.
✍🏿சுபா கிட்டு
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×